Asianet News TamilAsianet News Tamil

அதிரடியில் இறங்கிய மோடி..! பேச்சு வார்த்தைக்கே இடமில்லை... இனி வெச்சு செய்ய வேண்டியது தான்..!

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இந்தியா முழுக்க பெரும் பதற்றம் நிலவி வரும் இந்த தருணத்தில் அர்ஜெண்டினா அதிபர் மேக்ரி இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.
 
modi decided to treat pakistan in their way
Author
India, First Published Feb 18, 2019, 3:37 PM IST

அதிரடியில் இறங்கிய மோடி..! பேச்சு வார்த்தைக்கே இடமில்லை... இனி வெச்சு செய்ய வேண்டியது தான்..!

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இந்தியா முழுக்க பெரும் பதற்றம் நிலவி வரும் இந்த தருணத்தில் அர்ஜெண்டினா அதிபர் மேக்ரி இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.

இவர் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் 2022ஆம் ஆண்டு இந்தியாவில் 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாட உள்ளதால் அப்போது ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்பட திட்டமிட்டுள்ளதாக அர்ஜென்டினா அதிபர் தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டார்.

modi decided to treat pakistan in their way

தொடர்ந்து பேசிய பிரதமர் உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றும் இதனை அதிபர் மேக்ரியும் ஒப்புக்கொண்டுள்ளார். புல்வாமாவில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதுஇவரை பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்து விட்டது. இனிமேல் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை.. செயல்பாட்டில் இறங்குவதற்கான சரியான நேரம் இது..

modi decided to treat pakistan in their way

ஒட்டுமொத்த உலகமும் பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படவேண்டும் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் தயங்கினாலும் அது, ஆதரவு தெரிவிப்பதாக பொருள்படும் என குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து அர்ஜென்டினா அதிபர் பேசியபோது, புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், மனித குலத்தைக் காக்க பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios