modi birthday wishes to rahul gandhi

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 47 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ராகுலின் தாயாரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

இதேபோன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதில் ராகுல் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்