ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுட்பட்டு வருகின்றனர்.

இன்று காலை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரும் வரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவது என்றும், பிரதமர் தலைமையில் கூட்டம் நடந்தால் மட்டுமே கலந்து கொள்வோம் என எதிர்க்கட்சிகள் அறிவித்தன.

இதையடுத்து நடைபெற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து மீண்டும் கூடிய மக்களவையில், எதிர்கட்சிகளை பிரதமர் மோடி விமர்சித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

சுமார் அரை மணி நேரம் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் மக்களைவ நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.