Asianet News TamilAsianet News Tamil

பாஜக எம்எல்ஏவை தாக்கிய கும்பல்.. தலைவர்கள் சந்திக்கவே வரவில்லை - மனைவி பகீர் குற்றசாட்டு

பெரிய தலைவர்கள் யாரும் அவரை சந்திக்க வரவில்லை என்று கும்பலால் தாக்கப்பட்ட மணிப்பூர் பாஜக எம்எல்ஏ வுங்ஜாகின் வால்டேவின் மனைவி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Mob that attacked MLA Vungzagin Valte BJP Leaders never came to meet his wife accuses
Author
First Published Jul 25, 2023, 7:55 AM IST

கடந்த மே மாதம் இம்பாலில் கும்பலால் தாக்கப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ வுங்ஜாகின் வால்டேவின் மனைவி மைனு வால்டே, அவர் குணமடைந்த காலத்தில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் யாரும் அவரைச் சந்திக்கவில்லை என்ற பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார்.

மணிப்பூரில் உள்ள குகி-ஜோமி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான வுங்ஜாகின் வால்டே, மே மாதம் இம்பாலில் நடந்த ஒரு முக்கியமான கும்பல் தாக்குதலுக்குப் பிறகு சீராக குணமடைந்து வருகிறார். 61 வயதான அரசியல்வாதி பாஜக எம்எல்ஏ வுங்ஜாகின் வால்டே ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டார். மெய்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் இவரை தாக்கினார்கள் என்று கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வால்டேவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி, மைனு வால்டே இதுகுறித்து பேசிய போது, “தனது கணவர் பாஜக எம்எல்ஏவாக இருந்தபோதிலும், அவர் குணமடைந்த காலத்தில் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் யாரும் அவரைச் சந்திக்கவில்லை.

Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!

மணிப்பூர் சட்டப் பேரவையில் பழங்குடியின எம்.எல்.ஏ.க்கள் அதிகம் உள்ளனர். ஆனால் எனது கணவரைச் சந்திக்க மூவர் மட்டுமே வந்தனர்” என்று கூறினார். அடுத்து பேசிய இவரது மகன் ஜோசப், “மணிப்பூரில் நடந்து வரும் இன வன்முறை மற்றும் சாதாரண மக்களின் பாதுகாப்பில் அதன் தாக்கம் குறித்து கவலை தெரிவித்தார்.

"என் தந்தை, எம்.எல்.ஏ., மாநிலத்தில் பாதுகாப்பாக இல்லை என்றால், ஒரு சாதாரண மனிதனின் நிலையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். அவர்கள் எனது தந்தையின் தலையை கூரிய பொருட்களால் பலமுறை தாக்கினர். முகத்திலும் அடிபட்டது. இதனால் அவரது மண்டை உடைந்தது. தாக்கியது மட்டுமின்றி மின்சாரம் தாக்கியதால், தற்போது அவரால் இரண்டு நிமிடம் தனியாக உட்கார முடியவில்லை.

அவர் பேசும் திறனும் நினைவாற்றலும் இழந்துள்ளார். இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மைனு வால்டே தனது கணவர் தாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான நாளை நினைவு கூர்ந்தார், "இம்பால் இன மோதல்களைக் கண்டு, பல பழங்குடியினர் எங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். திடீரென்று, என் கணவரின் பிஎஸ்ஓ வந்து அந்தச் சம்பவத்தைப் பற்றி எங்களுக்குத் தெரிவித்தார். என் கணவர் பாதிக்கப்படுவதைப் பார்க்கும்போது என் கண்களில் கண்ணீர் வருகிறது."

பாஜக எம்எல்ஏ வுங்ஜாகின் வால்டே மாநிலத்தின் முக்கிய பழங்குடித் தலைவர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்டவர். அவர் தற்போது முதல்வர் பிரேன் சிங்கின் பழங்குடியினர் விவகாரங்களுக்கான ஆலோசகராக பணியாற்றுகிறார் மற்றும் முந்தைய அரசாங்கத்தில் பழங்குடியினர் விவகாரங்கள் மற்றும் மலையக அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

அடுத்த அதிர்ச்சி.. மணிப்பூரில் துயர சம்பவம்.. உயிருடன் எரிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி

Follow Us:
Download App:
  • android
  • ios