’ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷத்துடன் முஸ்லீம் இளைஞரை கொடூரமாக தாக்கிய கும்பல்.. அதிர்ச்சி வீடியோ வைரல்..

பாந்த்ரா ரயில்நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

mob beating a young man while chanting jai shriram at Bandra station shocking video viral

மும்பையில் இந்துப் பெண்ணுடன் சென்ற முஸ்லிம் இளைஞரை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பாந்த்ரா ரயில்நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஜெய் ஸ்ரீராம் என்று கூறி அந்த முஸ்லீம் இளைஞரை கொடூரமாக தாக்குவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த பாதிக்கப்பட்ட இளைஞர், பின்னர் ரயில் நிலையத்திற்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். ஒரு முஸ்லீம் இளைஞன், ஒரு இளம் இந்துப் பெண்ணுடன் (மைனர் என்று கூறப்படும்) ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அந்த கும்பல் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டபடி அவரை இரக்கமின்றி தாக்குவதையும் பார்க்க முடிகிறது.

 

"இன்று பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஒரு மைனர் இந்து பெண்ணைக் காப்பாற்றியுள்ளோம்" என்று கும்பலில் இருந்த ஒருவர் கேமராவில் கூறுவதைக் கேட்கலாம். இந்த நிலையில் ட்விட்டர் பயனர் ஒருவர் இதுதொடர்பான வீடியோ பதிவில் மும்பை காவல்துறை மட்டும் ரயில்வே போலீஸ் காவல்துறையை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

எனினும் மும்பை காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் இதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை, ஆனால் ரயில்வே காவல் படை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது, "இந்த விவகாரம் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறியது.

Vande Bharat : மாணவர்கள் வந்தே பாரத் ரயிலில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.. எப்படி.? முழு விபரம் இதோ !!

இதனிடையே AIMIM தலைவர் வாரிஸ் பதான், தனது ட்விட்டர் பதிவில் இந்த சம்பவம் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துள்ளார். நிர்மல் நகர் காவல் நிலையத்தின் கீழ் வரும் பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஜூலை 21/22 தேதிகளில் இந்தச் சம்பவம் நடந்ததாக தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக பதான் கூறினார்.

சம்பவம் நடந்து இத்தனை நாட்களாகியும் போலீசார் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஜெய்ப்பூர்-மும்பை ரயில் துப்பாக்கி சூடு சம்பவம் ஜூலை 31 அன்று நடந்ததாகவும், இந்த விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். இருப்பினும், பாந்த்ரா ரயில் நிலைய சம்பவத்தில் போலீஸாரால் எந்த விசாரணையும் புகாரும் பதிவு செய்யப்படவில்லை. பதான் ஒரு முழுமையான விசாரணையைக் கோரினார், "உடனடி மற்றும் முறையான விசாரணை அவசியம்!!!" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரை போலீசில் புகார் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில், யாரும் கைது செய்யப்படவில்லை, விசாரணையும் நடைபெறவில்லை என்பதால் இந்த சம்பவத்திற்கு பலரும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios