காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பேசியதாக சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆர்.கே.ராய், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஷ்கர் மாநிலம் கந்தர்தேகி சட்டசபைத் தொகுதியின் எம்.எல்.ஏ. ஆர்.கே. ராய். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த சில மாதங்களாக கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, ஆர்.கே. ராய், கூறிய கருத்தால், அவரை, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் சஸ்பெண்ட் செய்துள்ளது. கழுதையை என்னால் குதிரை என அழைக்க முடியாது என ராகுல் காந்திக்கு எதிராக, ராய் கூறியதே இந்த சஷ்பெண்டுக்கு காரணமாம்.

அவரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.கே.ராயை காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வது என்று காங்கிரஸ் ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்தது என்று சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்ததாக, காங். மாநில தலைவர் ஹரி பிரசாத் கூறியுள்ளார்.

தனக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன் என்று ஆர்.கே. ராய் கூறியுள்ளார். நான் கூறிய கருத்தை காங்கிரஸ் கட்சி தவறாக புரிந்து கொண்டு உள்ளது என்று கூறினார். கட்சியின் இந்த நடவடிக்கையால் நான் கவலை அடையவில்லை என்றும் நான் இப்போது சுதந்திரமாக உள்ளேன் என்றும் ஆர்.கே. ராய் கூறியுள்ளார்.