தம்மீதான பாலியல் குற்றச்சாட்டு பற்றி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பேட்டியளித்துள்ளார். பொய்களுக்கும் கால்கள் இல்லை, விஷம் உள்ளது என்று எம்.ஜே.அக்பர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தம்மீது சில பெண்கள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு ஆழ்ந்த வேதனை தருகிறது. வெளிநாட்டில் இருந்ததால், அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. பாலியல் புகார் அளித்தவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளேன். பொதுத்தேர்தல் வர இருக்கும் நிலையில் இது போன்ற பொய் புகார்கள் கூறப்படுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஆதரமாற்ற குற்றச்சாட்டு குறித்து எனது வழக்கறிஞர் கவனித்துக் கொள்வார் என்றார். இதன் பின்னணியில் ஏதேனும் திட்டம் உள்ளதா? இந்த குற்றச்சாட்டுகள் எனது நற்பெயருக்கும், புகழுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று மத்திய வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் கூறியுள்ளார்.