Asianet News TamilAsianet News Tamil

மிசோரம், சத்தீஸ்கரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு!

மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது

Mizoram and Chhattisgarh assembly elections to take place on tomorrow smp
Author
First Published Nov 6, 2023, 10:58 AM IST

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடியவுள்ளது. இதையடுத்து, அம்மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மிசோரம் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் 17ஆம் தேதியும், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதியும் முடிவடையும் நிலையில், மொத்தம் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 7ஆம் தேதியும் (நாளை) நடைபெறவுள்ளது. 

அதேபோல், மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நவம்பர் 7ஆம் தேதி (நாளை)  வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு வருகிற 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்த இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் நேற்றோடு முடிவுக்கு வந்தது. 

மிசோரம் பொறுத்தவரை மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. பாஜகவும் தனித்து உள்ளது. இருந்தாலும், 1987ஆம் ஆண்டு மிசோரம் மாநில அந்தஸ்து பெற்றது முதல் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ் ஆகிய கட்சிகளே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. 

தேர்வுக்கு சென்ற மாணவிகளின் தாலியை கழற்ற சொன்ன அதிகாரிகள்!

கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. சோரம்தங்கா மாநில முதல்வராக உள்ளார். மிசோ தேசிய முன்னணி மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்த முறை மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios