இந்தியாவையும், பலுசிஸ்தானையும் பல நூற்றாண்டுகளாக இணைத்துள்ள ஆழமான வரலாற்று, கலாச்சார, வணிக, பொருளாதார, இராஜதந்திர, பாதுகாப்பு மற்றும் பன்முக உறவுகளைப் பற்றி சிந்திக்கவும் கொண்டாடவும் இந்த மங்களகரமான சந்தர்ப்பம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
பலூச் தலைவர் விடுதலை தலைவரும், மனித உரிமை ஆர்வலருமான மிர் யார் ஆழமடைந்து வரும் சீன- பாகிஸ்தான் கூட்டணி குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். அடுத்த சில மாதங்களுக்குள் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் சீனா தனது படைகளை நிலைநிறுத்த முடியும் என்று அவர் கூறுகிறார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதிய கடிதத்தில், பலூசிஸ்தான் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் கட்டுப்பாட்டின் கீழ் ஒடுக்குமுறையை அனுபவித்து வருகிறது. இதில், அரசு ஆதரவுடன் வன்முறை, மனித உரிமை மீறல்கள் அடங்கும்’’ என்று அவர் கூறுகிறார்.

பலூசிஸ்தான் தேசியவாத தலைவர்கள் மே 2025-ல் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் அறிவித்தனர். பலூசிஸ்தான் குடியரசு 2026 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் 2026 ஆம் ஆண்டு பலூசிஸ்தான் உலகளாவிய இராஜதந்திர வாரத்தைக் கொண்டாடும் என்று மிர் பலூச் இப்போது அறிவித்துள்ளார். இது பலூசிஸ்தான் உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் நேரடியாக இணைக்க அனுமதிக்கும்.
ஜெய்சங்கருக்கு அவர் எழுதிய புத்தாண்டு செய்தியில், ‘‘2025 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய அரசாங்கம் எடுத்த துணிச்சலான, உறுதியான நடவடிக்கைகளைப் பாராட்டுகிறேன். இது கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதத் தளங்களை அழித்தது. இந்த நடவடிக்கைகளை இந்தியாவின் தைரியம், பிராந்திய பாதுகாப்பு மற்றும் நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் நிரூபணமாகியுள்ளது.
பலுசிஸ்தான் குடியரசின் 6 கோடி தேசபக்தி கொண்ட குடிமக்கள் சார்பாக, 2026 புத்தாண்டுக்கு இந்தியாவின் 14 கோடி மக்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகள், ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் அனைத்து மரியாதைக்குரிய தனிநபர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவையும், பலுசிஸ்தானையும் பல நூற்றாண்டுகளாக இணைத்துள்ள ஆழமான வரலாற்று, கலாச்சார, வணிக, பொருளாதார, இராஜதந்திர, பாதுகாப்பு மற்றும் பன்முக உறவுகளைப் பற்றி சிந்திக்கவும் கொண்டாடவும் இந்த மங்களகரமான சந்தர்ப்பம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த நீடித்த உறவுகள் ஹிங்லாஜ் மாதா கோயில் போன்ற புனிதத் தலங்களால் எடுத்துக்காட்டுகின்றன. இது நமது பகிரப்பட்ட பாரம்பரியம், ஆன்மீக உறவுகளின் காலத்தால் அழியாத சின்னமாகும்’’ என்று அவர் கூறினார்.

