உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌ சரோஜினி நகர் பகுதியில், ரத்தப் புற்றுநோய் பாதித்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர் இரு இளைஞர்கள். அவர்களில் ஒருவரையும், அந்தச் சிறுமி உதவி கோரியபோது உதவுவது போல் வந்து சிறுமியை வன்புணர்வு செய்த வழிப்போக்கர் ஒருவரையும் போலீஸர் கைது செய்தனர். 

பந்தாரா பகுதில் வசித்து வந்த வீரேந்த்ர யாதவ் (45) என்பவர்தான் அந்த நபர். அவர் அந்தப் பகுதியில் கட்டுமான நிறுவனத்தில் பணியில் உள்ளார். அவரையும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் சுமித் என்பவரையும் அந்த இரவு போலீஸார் கைது செய்துள்ளனர். 

சனிக் கிழமை இரவு 8.30 மணி அளவில், சிறுமியை அவரது ஆண் நண்பர் ஷுபம், நூடுல்ஸ் சாப்பிட்டு வரலாம் வா என்று கூறி அழைத்துள்ளார். அதை அடுத்து அந்தச் சிறுமியும் இரவு 9 மணிக்கு வெளியில் சென்று அவரைச் சந்தித்துள்ளார். சிறுமியை தன் பைக்கில் அழைத்துச் சென்ற அவர், சரோஜினி நகரின் சிலாவன் மசூதி அருகே தனிமையில் அமர்ந்து 20 நிமிடங்கள் பேசியுள்ளார். பின்னர், ஷுபம் அவரது நண்பர் சுமித்திடம் அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் சேர்ந்து நூடுல்ஸ் சாப்பிடலாம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர். 

சிறிது தொலைவு சென்றதும், சற்று இருட்டான பகுதியில் வைத்து, இருவரும் அந்தச் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின் அவரை அங்கேயே விட்டுவிட்டு ஓடியுள்ளனர். இதனால் பெரிதும் சோர்வடைந்த சிறுமி, தன் பலத்தைத் திரட்டி ஒருவாறு சமாளித்து பிரதான சாலைக்கு வந்துள்ளார். அப்போது, தன்னால் நடக்க இயலாத நிலையில், யாராவது உதவிக்கு வருகிறார்களா என்று பார்த்துள்ளார். அப்போது வீரேந்த்ரா என்பவர் வந்துள்ளார். அவரிடம் தன்னை வீட்டில் கொண்டு விடுமாறு உதவி கோரியுள்ளார் அந்தச் சிறுமி. 

சிறுமிக்கு உதவுவது போல் வந்த வீரேந்த்ரா அவரை தானும் வன்புணர்வு செய்து அங்கேயே விட்டு விட்டுச் சென்றாராம். பின்னர் அந்தச் சிறுமி வெகு நேரம் அரைகுறை மயக்க நிலையில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள தன் வீட்டுக்கு சமாளித்து சென்றுள்ளார். நள்ளிரவு வீட்டில் வந்து தன் தந்தையிடம் நடந்ததைக் கூற, அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதிகாலை 4.30க்கு புகாரைப் பதிவு செய்த சரோஜினி நகர் போலீஸார், உடனே தேடுதல் வேட்டை நடத்தி, வீரேர்ந்த்ரா மற்றும் சுமித் ஆகியோரைக் கைது செய்தனராம். அந்தப் பெண் இருக்கும் பகுதியைச் சேர்ந்த அவர் நண்பர் ஷப்னத்தை போலீஸார் தேடி வருவதாக ஏஎஸ்பி சர்வேஷ் மிஸ்ரா கூறியுள்ள்