பௌத்த ஆராய்ச்சி நிறுவன உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு
மத்திய சிறுபான்மையினர் விவகாரகள் அமைச்சகம், இமாலய கலாச்சார ஆய்வுகளுக்கான மத்திய நிறுவனத்தில் (CIHCS) உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் இமாலய கலாச்சார ஆய்வுகளுக்கான மத்திய நிறுவனத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பௌத்தம் சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பேணுவதற்கும், பௌத்த தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வியாழக்கிழமை இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
மத்திய சிறுபான்மையினர் விவகாரகள் அமைச்சகம், 'பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம்' மற்றும் 'பௌத்த மேம்பாட்டுத் திட்டம்' திட்டங்களின் கீழ் இமாலய கலாச்சார ஆய்வுகளுக்கான மத்திய நிறுவனத்தில் (CIHCS) உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
பௌத்த மக்ககளின் மேம்பாடு, பௌத்த கல்விசார் ஒத்துழைப்பு, ஆராய்ச்சியை ஊக்குவித்தல், மொழியைப் பாதுகாத்தல், புத்தகங்களை மொழிபெயர்த்தல் போன்றவற்றுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு மேம்பாட்டை வலுப்படுத்துவதற்காக இந்தத் தொகை செலவிடப்பட உள்ளது.
இமயமலை மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பௌத்த மேம்பாட்டுத் திட்டத்தில் இமாலய கலாச்சார ஆய்வுகளுக்கான மத்திய நிறுவனம் பங்களித்து வருகிறது. சமூக, வரலாற்று, மொழி, சமயம் மற்றும் பிற கலாச்சார விஷயங்களில் தங்கள் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளும் சர்வதேசப் புகழ் பெற்ற அறிஞர்களை இணைக்கும் மையமாக செயல்பட்டு வருகிறது.
இளைஞர்கள் ஆராய்ச்சியின் மதிப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் நேர்மறையான சிந்தனை வளர்ச்சிக்கும் இந்நிறுனவம் உதவுகிறது. இப்பகுதியில் பௌத்த கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு வகையான பட்டறைகள், பயிற்சி அமர்வுகள் போன்ற நிகழ்ச்சிகளை இந்த மையம் ஏற்பாடு செய்கிறது.