minister son died in road accident

தெலங்கான மாநில தலைநகர் ஹைதரபாத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் ஆந்தி மாநில அமைச்சர் நாராயணாவின் மகன் நிஷித் நாராயணாவும் அவரது நண்பரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநில நகராட்சித் துறை அமைச்சராக இருப்பவர் நாராயணா.இவரது மகன் நிஷத் நாராயணனும் அவரது நண்பர் ராஜா ரவி வர்மா என்பவரும் இன்று அதிகாலை மூன்று மணியளவில் ஹைதராபாத் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் பென்ஸ் கார் ஒன்றில் வேகமாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ பால தூண் ஒன்றில் அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது,

இதில் காரில் சென்ற அமைச்சரின் மகன் மற்றும் அவரது நண்பர் என இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அமைச்சரின் உறவினர்கள், உடல் வைக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

அமைச்சர் நாராயணா லண்டன் சென்றுள்ளதால் அவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அவசரமாக ஹைதராபாத் திரும்புகிறார்.