பொன்முடிக்கு நெருக்கடி! ரூ.81.7 லட்சம், வெளிநாட்டு பணம்... அமலாக்கத்துறை கூறும் அதிர்ச்சித் தகவல்கள்

அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான 7 இடங்களில் நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் பணம் தொடர்பான தகவல்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது.

Minister Ponmudy case: Enforcement Directorate seized, Rs. 81.7 lakh, foreign currency worth Rs. 13 lakhs

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, விழுப்புரத்தில் உள்ள அவரது மகன் கௌதம் சிகாமணியின் வீடு உள்ளிட்ட ஏழு இடங்களில் திங்கட்கிழமை காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 19 மணிநேரம் விணாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்ட அவர்கள் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். அதன்படி அமைச்சர் பொன்முடி மறுறம் அவரது மகன் கௌதம் சிகாமணி இருவரும் இன்றும் விசாரணைக்குச் ஆஜராகி இருக்கின்றனர்.

இந்நிலையில், அமலாக்கதுறை நேற்று நடைபெற்ற விசாரணை தொடர்பான விவரங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

ராய்ப்பூர் சாலையில் இளைஞர்கள் நிர்வாணப் போராட்டம்! சமூக வலைத்தளங்களில் வெளியான ஷாக்கிங் வீடியோ!

அதில், "சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 2002 இன் கீழ் 17/07/2023 அன்று சட்டமன்ற உறுப்பினரும் (எம்.எல்.ஏ) தமிழக அரசின் உயர் கல்வி அமைச்சருமான கே. பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணி, எம்.பி. ஆகியோருக்குத் தொடர்புடைய ஏழு இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது." என்று தெரிவித்துள்ளது.

மேலும், "இந்தச் சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள், ரூ. 81.7 லட்சம் பணம், சுமார் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள் வெளிநாட்டு பணம் (பிரிட்டிஷ் பவுண்டுகள்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.41.9 கோடி நிலையான வைப்பு நிதியும் முடக்கப்பட்டுள்ளது" எனவும் குறிப்பிட்டுள்ளது.

2006-2011 வரை சுரங்கத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது மகன், உறவினர்கள் உள்பட 5 பினாமிகள் பெயரில் செம்மண் குவாரி உரிமத்தை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் கிடைத்த வருவாய் பினாமி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த PT Excel Mengindo என்ற நிறுவனத்தில் ரூ.41.57 லட்சம் மதிப்பிலான பங்குகள் வாங்கப்பட்டன. அவை 2022ஆம் ஆண்டு ரூ.100 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதேபோல ஐக்கிய அரபு அமீரகத்தில் M/s Universal Business Ventures FZE என்ற நிறுவனமும் வாங்கப்பட்டிருக்கிறது எனவும் அமலாக்கத்துறை சொல்கிறது.

ஆந்திராவில் மகளின் எடைக்கு எடை 51 கிலோ தக்காளியை துலாபாரமாக வழங்கிய தம்பதி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios