சமையல் எரிவாயுக்கான மானியம் அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்யவும், மாதந்தோறும் சிலிண்டர் விலையை ரூ.4 ஆக உயர்த்த அனுமதி வழங்கவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் மானிய விலையில் சிலிண்டர் வாங்குபவர்களுக்கு அவர்கள் வங்கி கணக்கில் மானிய தொகை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த மானிய தொகையை அடுத்தாண்டு மார்ச் 31 முதல் ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூ. 4 உயர்த்தி கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தர்விட்டுள்ளார்.

சிலிண்டரின் முழுவிலையை கொடுத்து பொதுமக்கள் வாங்கிவிட்டால் பின்னர், மானியத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அதிருத்தியை ஏற்படுத்தியுள்ளது.