minibalace fine reconsider state bank announced
ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் குறைந்தபட்ச இருக்கு தொகைக்கும் குறைவாக இருந்தால் விதிக்கப்படும் அபாரதக் கட்டணத்தை குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் மறுஆய்வு செய்ய அந்த வங்கி திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏராளமான கருத்துக்கள், புகார்கள் வந்தததையடுத்து, அபராதக் கட்டணம் மறு ஆய்வு செய்யப்பட உள்ளது.
அபராதம்
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் வங்கி, கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சேமிப்பு கணக்கில் மாதந்தோறும் குறிப்பிட்ட அளவுக்கும் குறைவாக பணம் வைத்து இருந்தால், அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது. அதன்படி, நகர் புறங்களில் ரூ.5 ஆயிரம் குறைந்த பட்ச இருப்பு இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரூ.100 அபராதம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படும், இதேபோல, 50 சதவீதத்துக்கும் குறைந்தால் ரூ.50 அபராதம் மற்றும் வரிகள் விதிக்கப்படும் என்று அறிவித்தது.
கிராமப்புறம்
கிராமப்புறங்களில் வங்கிக்கணக்கு வைத்து இருப்பவர்கள் மாதந்தோறும் ரூ. ஆயிரம் இருப்பு தொகையாக வைத்து இருக்க வேண்டும். அவ்வாறு குறையும் போது ரூ.20 முதல் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது. இந்த அபராதம் விதிக்கும் திட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்குபின் மீண்டும் நடைமுறைக்கு வந்தது.
இந்த திட்டத்தில் இருந்து ஜன்தன் திட்டம், அடிப்படை வங்கிக்கணக்கு திட்டத்துக்கு மட்டும் அபராதம் விதிப்பது விலக்கு அளிக்கப்பட்டது.
எதிர்ப்பு
இந்த திட்டத்துக்கு வாடிக்கையாளர்ளிடம் கடுமையான எதிர்ப்பும், கண்டனமும் வந்ததையடுத்து மறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய வங்கி குழுவின் மேலான் இயக்குநர் ரஜனிஷ் குமார் கூறுகையில், “ சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகைக்கும் குறைவாக பணம் வைத்து இருந்தால் விதிக்கப்படும் அபராதத்தை குறைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மூத்த குடிமக்கள், மாணவர்கள் கணக்குக்கு மட்டும் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். இது தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏராளமான கருத்துக்களும், புகார்களும் வந்துள்ளன. அது குறித்து விவாதித்து வருகிறோம்.
சேமிப்பு கணக்கை பராமரிக்க வங்கிகளுக்கு அதிகமாக செலவாகிறது. ஏராளமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம். அதை பராமரிக்க அதிகமான செலவாகிறது. அதில் இருந்து மீள வங்கிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒரு மாதத்தில் ரூ.235 கோடி வசூல்....
மாதந்தோறும், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை வைக்காதவர்களிடம் இருந்து அடுத்த மாதம் அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து அபராதம் கழித்துக் கொள்ளப்படும். அந்த வகையில் மே மாதம் அபராதத் தொகை ஜூன் மாதம் வசூல் செய்யப்பட்டது. இதில் ரூ.235 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக வசூலானது என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
