Asianet News TamilAsianet News Tamil

ராணுவ வீரர்கள் சொகுசு கார்கள் வாங்க தடை... மத்திய அரசு அதிரடி..!

ராணுவ வீரர்கள் ஃபார்ச்சுனர், சஃபாரி போன்ற எஸ்யுவி வகை கார்களை மிலிட்டரி கேண்டீன்களில் இனி வாங்க முடியாது என்று மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

Military personnel can no longer buy Fortuners, 4-wheel drives from CSD canteens
Author
Delhi, First Published Jun 11, 2019, 4:05 PM IST

ராணுவ வீரர்கள் ஃபார்ச்சுனர், சஃபாரி போன்ற எஸ்யுவி வகை கார்களை மிலிட்டரி கேண்டீன்களில் இனி வாங்க முடியாது என்று மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

  Military personnel can no longer buy Fortuners, 4-wheel drives from CSD canteens

ராணுவத்தின் சார்பில் மிலிட்டரி கேன்டீன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கேண்டீனிலிருந்து ராணுவத்தில் வேலைப்பார்ப்பவர்களின் குடும்பங்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும். இதில் மளிகை பொருட்கள், பைக், கார் போன்ற பொருட்கள் கிடைக்கும். இதனால் ராணுவ குடும்பத்தினர் பயன்பெற்று வந்தனர். அத்துடன் இங்கு வாங்கும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி மற்றும் பிற வரி சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தது.

 Military personnel can no longer buy Fortuners, 4-wheel drives from CSD canteens

இந்நிலையில் மிலிட்டரி கேன்டீன்களில் கார்கள் வாங்குவதற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அதன்படி இனி மிலிட்டரி கேண்டீன்களிலிருந்து ராணுவத்தில் சம்பள அளவுகோல் 10 முதல் 18 வரை இருக்கும் வீரர்கள், இந்த மாதம் முதல் ரூ, 12 லட்சம் மதிப்பிலான 2500 சிசி வரையிலான கார்களை மட்டுமே வாங்க முடியும். இதேபோல ராணுவத்தில் சம்பள அளவுகோல் 3ஏ முதல் 9 வரை இருப்பவர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான 1,400 சிசி வரையிலான கார்களை வாங்க முடியும். இதேபோல ராணுவத்தில் சம்பள அளவுகோல் 3ஏ முதல் 9 வரை இருப்பவர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான 1,400 சிசி வரையிலான கார்களை வாங்க முடியும்.Military personnel can no longer buy Fortuners, 4-wheel drives from CSD canteens

இந்த கார்களை வாங்குவதற்கான காலக்கெடுவையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் ஒரு வீரர் ராணுவ பணியிலிருக்கும் போது ஒரு காரும், ஓய்வுப் பெற்ற பிறகு ஒரு காரும் வாங்க முடியும். அத்துடன் ஒரு கார் வாங்கி 8 ஆண்டுகள் கழித்து தான் மற்றொரு காரை வாங்க முடியும். இந்த புதிய விதிகளால் மிலிட்டரி கேண்டீன்களில் இனி ஃபார்ச்சுனர், இன்னோவா, காரோலா ஆல்டிஸ், ஸ்கார்பியோ போன்ற கார்களை வாங்க இயலாது என்றும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios