பேங்க் ஆப் பரோடா, விஜயா, தேனா ஆகிய வங்கிகளை விரைவில் இணைக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். கடந்த ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியுடன் மகிளா வங்கி உள்ளிட்ட 5 துணைவங்கிகள் இணைக்கப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக இப்போது, இந்த மூன்று வங்கிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த இணைப்பின் மூலம் நாட்டினஅ 3-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது உருவெடுக்கும்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் அளித்த பேட்டியில் கூறுகையில் “ தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி ஆகிய அரசு வங்கிகளை ஒன்றாக இணத்து நாட்டின் 3-வது மிகப்பெரிய வங்கியாக மாற்ற மத்திய அரசு முடிவ செய்துள்ளது.

வங்கிகளின் வலிமை, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இணவதன் மூலம் இன்னும் திறமையாக செயல்பட்டு, மக்களுக்கு அதிகமான கடன்களை வழங்கும் ஸ்திரத்தன்மை பெறும், பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்.

தற்போது வங்களின் கடன் அளிக்கும் வசதி மிகவும் மோசமாக இருக்கிறது, இதனால், கார்ப்பரேட் துறை முதலீடு பாதிக்கிறது. அதிகமான வராக்கடனை அளித்து வங்கிகளின் சொத்துக்கள் குறைந்து, நலிவடையும் நிலைக்கு செல்கின்றன. எனவே இந்த மூன்று வங்கிகளையும் இணைப்பதன் மூலம் வங்கிச் செயல்பாடுகள் வலுப்பெறும் என அவர் தெரிவித்தார்.

அதேசமயம், இந்த 3 வங்கிகளையும் இணைப்பதன் மூலம் இதில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் எந்த விதத்திலும் அச்சப்படத்தேவையில்லை, ஆட்குறைப்போ அல்லது வேலையில் இருந்து நீக்கமோ நடைபெறது. பணியாளர்களின் நலன் காக்கப்படும் என்று நிதிச்சேவைகள் செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்தார். இந்த இணைப்பு மூலம் இந்த 3 வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எந்தவிதமான பாதிப்பும்,குறைபாடும் ஏற்படாது. பெரும்பாலான பங்குகள் அரசின் கைவசமே இருக்கும் எனத் தெரிவித்தார்.