பெங்களூரு எலஹங்கா சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற Mera Maati Mera Desh முன்னெடுப்பில் பங்கேற்று பேசினார் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். தேசத்துக்காக பாடுபட்ட ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் நடந்த இந்த நிகழ்வில் மாநில அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடன் இணைந்து, பஞ்ச் பிரான் பிரதிக்யா மூலம் தேசத்திற்கான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். இந்த பிரச்சாரத்தின் மூலம் தேசபக்தியின் உணர்வை எழுப்பி நாட்டைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை ஒவ்வொரு குடிமகனும் எடுப்பார்கள் என்றார் அவர்.
மேலும் சந்திரசேகர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்றும். உலகின் 12வது பெரிய பொருளாதாரத்தில் இருந்து 5வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக நாம் தற்போது இருக்கிறோம் என்றும் கூறினார். மேலும் எதிர்வரும் 2024ல் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற முடியும் என்றார் அவர்.
நீண்ட பயணத்தை நேசிப்பவரா? உங்களுக்காகவே இந்திய ரயில்வே இயக்கும் டாப் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள்!
நமது பிரதமர் Mera Mati Mera Deshன் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இந்த திட்டம் உள்ளது என்று ராஜீவ் சந்திரசேகர் கூறினார். வலிமையான இந்தியாவையும், பாதுகாப்பான இந்தியாவையும், வளர்ந்த இந்தியாவையும் உருவாக்குவோம். வளர்ந்த இந்தியா என்ற இந்த தொலைநோக்கை நனவாக்க பங்குதாரர்களாக இணைந்து செயல்படுவோம். மேரா மதி மேரா தேஷ் நம் நாட்டைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தேசபக்தியின் செய்தியை வழங்குகிறது. இதுவே நமது இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்கான நமது தொலைநோக்குப் பார்வையும் நோக்கமும் ஆகும் என்றார் அவர்.
தனது பிரச்சாரங்களின் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர், யெலஹங்கா சட்டமன்றத் தொகுதியில் உள்ளூர் சமூக உறுப்பினர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார். இந்த முயற்சி வசுதா வந்தன் முயற்சியின் ஒரு பகுதியாகும். இம்முயற்சியின் கீழ், ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் கிராமங்களில் 75 உள்நாட்டு மரக் கன்றுகளை நட்டு, அமிர்த வாடிகாவை வளர்ப்பதன் மூலம் தாய் பூமியை புதுப்பிக்க இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக 2000 முதல் 2010 வரை, மாநில அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பகுதிகளில் தனிப்பட்ட முறையில் 28,500 மரக்கன்றுகளை நட்டு அல்லது ஸ்பான்சர் செய்வதன் மூலம் பெங்களூரின் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கு பங்காளித்துள்ளார். ஆத்தூர் ஏரி, தொட்டபொம்மசந்திரா ஏரி, யெலஹங்கா ஏரி, சின்னப்பனஹள்ளி ஏரி, கோகிலு ஏரி, யெலஹங்கா புட்டனஹள்ளி ஏரி மற்றும் கைகொண்டரஹள்ளி ஏரிகளைச் சுற்றி பசுமையாக்குவது இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.
ஜூலை 30ம் தேதி மன் கி பாத்தின் 103 வது பதிப்பின் போது, 77 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் தனித்துவமான யோசனையை பிரதமர் மோடி முன்வைத்தார். அம்ரித் மஹோத்சவ் விழாவின் போது அவர் மேரி மதி மேரா தேஷ் பிரச்சாரத்தை அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் இந்த பிரச்சாரம் நாட்டின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெறுகின்றது.
