ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில்100 கோடி ரூபாயில் அண்ணல் அம்பேத்கர் பெயரில் நினைவுப் பூங்கா அமைக்க அம்மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்.

அண்ண்ல்  அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் அம்பேத்கருக்கு மரியாதை அளிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

இதனிடையே  ஆந்திரப் பிரதேச மாநிலம், அமராவதியில் 100 கோடி ரூபாயில் செலவில் அம்பேத்கர் பெயரில் நினைவுப் பூங்கா அமைக்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழு தலைவரான அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி, அமராவதியின் ஐனவோலு என்ற கிராமத்தில் இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து, அங்கு பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 

ஒதுக்கப்பட்ட 100 கோடி ரூபாயில் 25 கோடி ரூபாய் அம்பேத்கர் சிலை அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,  சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் இந்தப் பூங்காவை அமைக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த பூங்காவிற்குள்ளேயே, பிரம்மாண்ட அரங்கம், அம்பேத்கர் நினைவு நூலகம் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.