மாவீரர் சத்ரபதி சிவாஜிக்கு அரபிக்கடலில் நினைவு சின்னம் அமைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

மாவீரர் சத்ரபதி சிவாஜிக்கு நினைவு சின்னம் அமைக்க கடந்த 2009 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. 

நினைவு சின்னம் அமைப்பதற்காக அப்போது ரூ.700 கோடியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இத்திட்டம் 

கிடப்பில் போடப்பட்டது.

நினைவு சின்னம் அமைப்பதற்கான நிதியை, மத்திய அரசிடம் கேட்க உள்ளதாகவும், அதற்கான சுற்றுச்சூழல் உள்ளிட்ட திட்டத்திற்கான அனைத்து அனுமதிகளையும் பெற்று விட்டதாக அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகள் வரும் 2019 ஆம் அண்டு நிறைவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 

நினைவிடத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பது, சிவாஜி சிலை, பீடம், பொதுமக்கள் வந்து செல்ல வசதி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது 50,02,000 பேர் அமரும் வகையிலான அரங்கு அமைக்கப்பட உள்ளதாகவும், சிவாஜியின் வாழ்கையை விளக்கும் வகையில் 3டி மற்றும் 4டி வடிவில் ஒளிபரப்ப்பட உள்ளதாகவும் கூறினார். 15.96 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்ட இந்த நினைவு சின்னத்தின் வடிவமைப்பை தயார் செய்ய 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெகவல்கள் வெளியாகின்றன.