Meira kumari coming to chennai tomorrow - to meet karunanithi and stalin

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடும் மீராகுமார், நாளை சென்னை வருகிறார்.

அப்போது, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார் போட்டியிடுகிறார். அவர் நாடு முழுவதும் சென்று ஆதரவு திரட்டுகிறார்.

நாளை மாலை 4.30 மணிக்கு சென்னை வரும் மீராகுமாருக்கு, விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் 10 மாவட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

இரவு 7 மணிக்கு திமுக கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு செல்லும் மீராகுமார், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்பி, எம்எல்ஏ.க்களின் ஆதரவை திரட்டி பேசுகிறார். இரவு 7.40 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.

இரவு 8.30 மணியளவில் கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார். இரவி கிண்டியில் தங்குகிறார்.

ஞாயிறுக்கிழமை காலை 9 மணிக்கு புதுவைக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். அங்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.

அங்கு மதிய உணவு முடிந்து மீண்டும் சென்னை திரும்புகிறார். இதைதொடர்ந்து மாலை 4.30 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.