MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Union Budget 2026: திருந்தாத மத்திய அரசு..பாஜகவை விளாசிய ராகுல் காந்தி.. நிர்மலா சீதாராமன் பதிலடி!

Union Budget 2026: திருந்தாத மத்திய அரசு..பாஜகவை விளாசிய ராகுல் காந்தி.. நிர்மலா சீதாராமன் பதிலடி!

மத்திய பட்ஜெட்டை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நிர்மலா சீதாராமன் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து விரிவாக பார்ப்போம்.

1 Min read
Author : Rayar A
Published : Feb 01 2026, 07:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மத்திய பட்ஜெட்டை விமர்சித்த ராகுல் காந்தி
Image Credit : x

மத்திய பட்ஜெட்டை விமர்சித்த ராகுல் காந்தி

மத்திய பட்ஜெட் இந்தியாவின் உண்மையான நெருக்கடியை கண்டுகொள்ளாமல், தவறுகளைத் திருத்திக்கொள்ள மறுக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,உற்பத்தி குறைந்து வருவதாகவும், முதலீட்டாளர்கள் மூலதனத்தை திரும்பப் பெறுவதாகவும், குடும்ப சேமிப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
இளைஞர்களுக்கு வேலை இல்லை; உற்பத்தி வீழ்ச்சி
Image Credit : ANI

இளைஞர்களுக்கு வேலை இல்லை; உற்பத்தி வீழ்ச்சி

"இளைஞர்களுக்கு வேலை இல்லை. உற்பத்தி வீழ்ச்சி. முதலீட்டாளர்கள் மூலதனத்தை திரும்பப் பெறுகிறார்கள். குடும்ப சேமிப்பு வீழ்ச்சி. விவசாயிகள் துயரத்தில் உள்ளனர். வரவிருக்கும் உலகளாவிய அதிர்ச்சிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் உண்மையான நெருக்கடிகளைக் கண்டுகொள்ளாமல், தவறுகளைத் திருத்திக்கொள்ள மறுக்கும் ஒரு பட்ஜெட்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் பதிலடி

மத்திய பட்ஜெட்டை ராகுல் காந்தி விமர்சித்ததற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "அரசியல் ரீதியாக நீங்கள் விமர்சிக்க விரும்பினால், தாராளமாக செய்யுங்கள். ஆனால் உங்கள் வாதங்களுக்கு அடிப்படையான உண்மைகளை நீங்கள் கொடுத்தால், அதைக் கேட்கவும் பதிலளிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்" என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

33
பொருளாதாரம் வலுவாக உள்ளது
Image Credit : ANI

பொருளாதாரம் வலுவாக உள்ளது

தொடர்ந்து ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன், ''அவர் எந்தத் திருத்தத்தைப் பற்றி பேசுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. பொருளாதாரம் மற்றும் அதன் அடிப்படைகள் வலுவாக உள்ளன. 

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை நமது பல துறைகளை பாதிக்கிறது. அவர்களுக்காக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஜவுளி, தோல், கிராமப்புறங்களில் பணிபுரியும் மக்கள், விவசாயிகள் மற்றும் மதிப்பு கூட்டல், பெண் தொழில்முனைவோர் மற்றும் சுயஉதவி தொழில்முனைவோருக்காக பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்" என்றார்.

''அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும், அது உண்மைகளால் ஆதரிக்கப்பட வேண்டும். வெளியில் இருந்து வரும் எந்தவொரு ஏற்ற இறக்கத்தினாலும் சாதாரண, சிறு மக்கள் தங்கள் வாழ்வில் பெரிய மாற்றங்களைச் சந்திக்க வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வதற்கான வழிகள் இவை'' என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
2026 யூனியன் பட்ஜெட்
யூனியன் பட்ஜெட்
ராகுல் காந்தி
இந்திய தேசிய காங்கிரஸ்
பிஜேபி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Special Trains: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? இந்த சிறப்பு ரயில்களில் சீட் காலியா இருக்கு!
Recommended image2
DA Hike Good News: அகவிலைப்படி 63% ஆகிறதா? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! மாத சம்பளத்தில் எவ்வளவு கூடும்?
Recommended image3
VDA Hike: குறைந்தபட்ச ஊதியம் ரூ.1,111.! அனைத்து தொழிலாளர்களுக்கும் புதிய சம்பளம்.! அதிரடியாக உயர்ந்த VDA!
Related Stories
Recommended image1
Union Budget 2026: தேர்தல் நேரத்திலும் தமிழகம் கண்ணுக்கு தெரியலையா? பெரிய ஏமாற்றம்.. கொந்தளித்த ஸ்டாலின்
Recommended image2
Union Budget 2026: டோட்டலாக மாறப்போகும் இந்திய ராணுவம்.. நிதியை வாரி வழங்கிய மத்திய அரசு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved