meat shops leave due to mahaveer jayanthi
ஊண் உண்ணாமையை வலியுறுத்தி மகாவீரர் வாழ்ந்த காலம் முழுவதும் மக்களுக்கு நன்னெறி கொள்கைகளை எடுத்துரைத்தார்.
இதையொட்டி ஆண்டு தோறும், மகாவீரரின் பிறந்த நாளன்று, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இறைச்சிகடைகளுக்கு விடுமுறை அறிவிப்பை அரசு வெளியிடுகிறது. இதையொட்டி இறைச்சி கடைகளும் மூடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாடு முழுவதும் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி நாளை, அனைத்து மாநகராட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
‘சன் டே’ என்றாலே ‘சரக்கு’ தான் என இருக்கும் இன்றைய நிலையில், அட்லீஸ்ட் ‘பிரியாணி’யாவது கிடைக்கும் என எதிர் பார்த்த சிலருக்கு, பிரியாணி கடைகளும் மூடப்படும் என தகவல் வந்துள்ளதால், அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
