ரூ.1,316 கோடி சொத்து: வருமான வரித்துறை வலையில் சிக்‍கிய  மாயாவதி சகோதரர்?

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் சகோதரர் ஆனந்த்குமார், ரூ.1,316 கோடி அளவுக்கு சொத்து சேர்த்தது தொடர்பாக,  வருமான வரித்துறை கண்காணிப்பில் அவர் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமாக இருந்தவா் மாயாவதி. இவரது சகோதரர் ஆனந்த் குமார். தொழிலதிபராக உள்ளார்.

குறுகிய காலத்தில் ரூ.1,316 கோடி அளவுக்கு சொத்து  ஆனந்த் குமாா் மீது புகார் எழுந்துள்ளது. மாயாவதி முதல்வராக இருந்த கால கட்டம் உட்பட 2007 முதல் 2014 காலகட்டத்தில், ரூ.7.5 கோடியாக இருந்த இவரது சொத்து மதிப்பு, ரூ.1,316 கோடியாக உயர்ந்துள்ளது.

இது குறித்தும், இவர் தொடர்பான சில நிறுவனங்கள் வாங்கிய பல கோடி கடன் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஆனந்த் குமார், மிகப்பெரிய பங்குதாரராக உள்ள  நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தொிவிக்‍கின்றன.