Mary Kom is the fifth medal winner

ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டி வியட்நாமில் ஹோசிமின் நகரில் நடைபெற்றது. இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் இதில் கலந்து கொண்டார். 48 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட மேரிகோம், இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். 

இந்த நிலையில் இறுதி போட்டி இன்று ஹோசிமின் நகரில் நடைபெற்றது. இதில் தென்கொரியாவைச் சேர்ந்த கிம் ஹயாங் மி மற்றும் மேரிகோம் மோதினார்கள். இந்த போட்டியில் மேரிகோம் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். 

மேரிகோம் குத்துச்சண்டை போட்டியில் ஓராண்டுக்குப் பிறகு பதக்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் பதக்கம் பெற்றதை அடுத்து மேரிகோம் வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மேரிகோம் தகுதி பெறவில்லை. இந்த நிலையில், ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அவர், வியட்நாமில் நடைபெற்ற போடடியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு மீண்டும் உற்சாகத்தை அளித்துள்ளார்.