marriage for two males in madhya pradesh
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரில் அமைந்துள்ள முசாகேதி கிராமத்தினர், மழை வேண்டி ஒரு வினோத நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இரு ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால், மழை பொழியும் என்ற நம்பிக்கையில் இந்த வித்தியாசமான திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
முசாகேதி கிராமத்தை சேர்ந்தவர்கள் சாகாராம் மற்றும் ராகேஷ். இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். திருமண சடங்குகள் முறையாக செய்யப்பட்டது. திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் ஆடிப்பாடி சந்தோஷமாக கலந்து கொண்டனர்.
அதன்பின்னர், வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். இதை தொடர்ந்து, திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. திருமணம் முடிந்த சில மணித்துளிகளில் அப்பகுதியில் மழை பெய்தது என்பது குறிப்டத்தக்கது.
இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், ’’கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. வருண பகவானை வேண்டி, நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தால் மழையும் பெய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் மழை தொடரும் என எதிர்பார்க்கிறோம்’’ என தெரிவித்துள்ளனர்.
