ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. 

தி.மு.க.வை சேர்ந்த தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது 2ஜிஉரிமத்தை ஏர்செல் நிறுவனத்திற்கு வழங்க அதன் பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்க செய்ததில் சன் குழுமத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் ஆதாயம் கிடைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், அந்த குழுமத்தின் 742 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டது. 

இந்த சொத்துக்களை விடுவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது. 

அதேவேளையில் ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களை விடுதலை செய்ததற்கு எதிராக வழக்கு தொடர அமலாக்கப்பிரிவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.இதனைத்தொடர்ந்து நேற்று அமலாக்கப்பிரிவு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.