Asianet News TamilAsianet News Tamil

கொசுக்கள் உற்பத்தி செய்யும் குடியரசு தலைவர் மாளிகை... மாநகராட்சி நோட்டீஸ்...

Manufacture of mosquitoes in president palace and the corporation issued the notice
Manufacture of mosquitoes in president palace and the corporation issued the notice
Author
First Published Jun 18, 2017, 6:15 PM IST


டெல்லி குடியரசு தலைவர் மாளிகைக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குடியரசு தலைவர் மாளிகையில் கொசுக்கள் வளர்வதற்கு இடமளிப்பதாக கூறி அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயகத்தின் கம்பீர அடையாளமாகத் திகழ்கிறது குடியரசு தலைவர் மாளிகை. 1911 ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றியபோது வைஸ்ராய் மாளிகையாகத்தான் இது உருவாக்கப்பட்டது. குடியரசு தலைவர் மாளிகை தவிர காம்ப்ளக்ஸ்கள், குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் அதிகளவில் மரங்கள் நடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மாளிகையின் கவரும் அம்சங்களில் ஒன்று, இங்குள்ள `மொகல் கார்டன் ' எனப்படும் மொகலாயத் தோட்டம். பச்சைப் போர்வையும், பலவண்ண மொகலாயத் தோட்டம், குடியரசு தலைவர் மாளிகைக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷாலிமர் தோட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மொகலாயத் தோட்டம், உலக முழுவதிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது.

இந்த நிலையில், குடியரசு தலைவர் மாளிகை டெங்கு கொசுவை பரப்புவதாகக் கூறி டெல்லி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், குடியரசு தலைவர் மாளிகையில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளதாக கூறியுள்ளன. மேலும் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதாக மாநகராட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதனால், டெல்லியில் மிக வேகமாக டெங்கு வைரஸ் பரவி வருகிறது. இதனை அடுத்து, கொசுக்கள் உற்பத்திக்கு காரணமான கட்டிடங்களுக்கு மாநகராட்சி கவுன்சில் நோடடீஸ் விடுத்து வருகிறது. அந்த வகையில் ராஷ்டிரபதி பவனுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுவரை 80 நோட்டீஸ்கள் வரை குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்பப்ட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே பிரச்சனை தொடர்பாக அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்

Follow Us:
Download App:
  • android
  • ios