குடியரசு தின விழாவில், தூங்கி தூங்கி வழிந்த மனோகர் பாரிக்கர்....!!

குடியரசு தினமான இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இன்று டெல்ல்ஹியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்வில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மேடையிலேயே அசதியில் உறங்கி விட்டார்.

பட்டபகலில் மனோகர் பாரிக்கர் ,மேடையிலேயே தூங்கியது அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டது. இந்த காட்சி தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது.

அதே நேரத்தில், அமைச்சர் இவ்வாறு உறங்குவது என்பது புதியது அல்ல. ஏனெனில் ஏற்கனவே , கடந்த 2௦14 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் ஆற்றிய உரையை கேட்டவாறே உறங்கிவிட்டார் என்பது குறிபிடத்தக்கது.

இன்று நடந்த அமைச்சரின் மேடை தூக்கம் தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் .....