கோவா முதல்வர் மனோகர் பரீகர், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், உடல்நிலை இதுவரை சீராகவில்லை. இதனால், மீண்டும் அவர் கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரீக்கர் உடல்நலம் கருதியும் தற்போதைய நிலையில் அவரால் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால், புதிய முதல்வரை தேர்வு செய்ய பாஜக மேலிடம் முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து மத்திய குழுவினர் கோவா சென்று, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது உடல்நிலை காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய பரீக்கர் முடிவு செய்துள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி தனது ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்தில் அளிக்க மனோகர் பரீக்கர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

இதற்காக அவர், டெல்லி செல்ல உள்ளார். ஆனால், அவர் மேல் சிகிச்சைக்காக மட்டுமே டெல்லி செல்வதாக மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.