கடந்த 2004 இல் இருந்து 2014 வரை பிரதமராக இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங் . ராஜ்ய சபா உறுப்பினரான இவரின் பதவி காலம் சமீபத்தில் நிறைவு பெற்றது . இந்த நிலையில் மீண்டும் ராஜ்ய சபாவிற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று வெள்ளிக்கிழமை ராஜ்ய சபா தலைவரான வெங்கையா நாயுடு அலுவலகத்தில் மன்மோகன்சிங் பதவி ஏற்றுக் கொண்டார் . இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி , ராகுல் காந்தி ,குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர் .

ராஜஸ்தானில் இருந்து பாஜக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மதன் லால் சைனி காலமானதை தொடர்ந்து அந்த இடம் காலியாக இருந்தது . அதில் காங்கிரஸ் சார்பாக மன்மோகன் சிங் நிறுத்தப்பட்டிருந்தார் . பாஜக  எதிர் வேட்பாளரை நிறுத்தாமல் ஒருமனதாக மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிபிடத்தக்கது .

1991 முதல்  5  முறை அசாமில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினராக மன்மோகன்சிங் இருந்தார் .