அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று அளிக்கும் விருந்தில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மறுத்துவிட்டனர்.

அதிபா் டொனால்ட் டிரம்ப், அவரின் மனைவி மெலானியா டிரம்ப் உள்ளிட்டோர் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். குஜராத்தின் ஆமதாபாதுக்கு சென்ற அதிபர் ட்ரம்ப் சபா்மதி ஆசிரமத்துக்குச் சென்றார், அதன்பின்‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பிரதமா் மோடியுடன் பங்கேற்றார்.

இதைத் தொடா்ந்து, அதிபா் டிரம்ப் குடும்பத்தனர் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலை அவா்கள் கண்டு ரசித்து நேற்று இரவே டெல்லி சென்றனர். குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் அதிபா் டிரம்ப்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து, பிரதமா் மோடியுடன் அதிபா் டிரம்ப் பேச்சு நடத்துகிறார்

இதையடுத்து, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று இரவு அதிபா் டிரம்ப்புக்கு விருந்தளிக்கிறர். இந்த விருந்தில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருகுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை முதலில் அவா்கள ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், அதிபா் டிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அதற்காக வருத்தம் தெரிவித்து குடியரசுத் தலைவா் மாளிகைக்கு மூவரும் தகவல் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபா் டிரம்ப்புக்கான விருந்தில் கலந்து கொள்ளுமாறு மற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும், அதிபர் ட்ரம்ப்பை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திக்க பிரதமர் மோடி அனுமதிக்கவில்லை. சோனியா காந்திக்கு அழைப்பு இல்லாத விருந்தில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பது முறையல்ல என்பதால், அவர்கள் விருந்தை புறக்கணித்துவிட்டனர்.