Asianet News TamilAsianet News Tamil

மணிப்பூரில் தொடரும் கலவரம்... கண்டவுடன் சுடுங்கள்... ஆளுநரின் அதிரடி உத்தரவால் பரபரப்பு!!

மணிப்பூரில் கலவரம் தொடருவதை அடுத்து கலவரக்காரர்களை கண்டதும் சுட அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 

manipur governor issues shoot at sight order to stop riots
Author
First Published May 4, 2023, 7:32 PM IST

மணிப்பூரில் கலவரம் தொடருவதை அடுத்து கலவரக்காரர்களை கண்டதும் சுட அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின சமூகங்களும், பழங்குடி அல்லாத சமுகங்களும் உள்ளன. இதனிடையே, அம்மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ராகுலுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதிக்கு பதவி உயர்வு... உருவானது புதிய சர்ச்சை!!

மணிப்பூரில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டமானது பழங்குடி மக்களுக்கும், பழங்குடி அல்லாத மக்களுக்கும் இடையேயான மோதலை ஏற்படுத்தியது. இது கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்துவதுடன் வீடுகள், கட்டிடங்களுக்கும் தீ வைத்தனர். இதில் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மோதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் அனுமன் ஆயுதம் பாஜகவுக்கு கை கொடுக்குமா? ஜன் கி பாத் - ஏசியாநெட் நியூஸ் சர்வே முடிவுகள்

இதை அடுத்து கலவரத்தை தடுக்க அங்கு ராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர். அவர்கள்  தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் 144 தடை உத்தரவு பிறப்பித்ததோடு இணைய சேவையும் முடக்கப்பட்டது. இந்த நிலையில், மணிப்பூரில் கலவரம் தொடருவதை அடுத்து கலவரக்காரர்களை கண்டதும் சுட அம்மாநில ஆளுநர் அதிரடி உத்தரவு பிறபித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios