manipur election results
மணிப்பூரின் போராட்ட மங்கையான இரோம் சர்மிளாவை சொந்த மக்களே ஏற்றுக்கொள்ளாமல் தோற்கடித்தனர். எதிர்த்து போட்டியிட்ட முதல்வர் இபோபி சிங் வெற்றி பெற்றுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது.

மணிப்பூரில் சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தை எதிர்த்தும், அதை வாபஸ் பெறக்கோரியும் கடந்த 15 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்த போராட்ட மங்கை இரோம் சர்மிளா இந்த முறை மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணி என்ள கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்.
முதல்வர் இபோபி சிங்கின் தொபால் தொகுதியில் அவரை எதிர்த்து இரோம் சர்மிளா போட்டியிட்டார். ஆனால், இரோம் சர்மிளாவின் போராட்டத்தையும் ஆதரிக்காத மாநில மக்கள் தேர்தலில் தோல்வியுறச்செய்தனர். மாறாக, முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இருப்பினும், மணிப்பூரில் உள்ள 60 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக் 32 இடங்களில் வெற்றி காங்கிரஸ் கட்சிக் தேவைப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சியான பாரதியஜனதா 14 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது, காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாரதியஜனதாவுக்கே ஆதரவாக வந்துள்ளது குறிப்பிடத்தக்து.
