டெல்லியில் இடப்பிரச்சினை காரணமாக இரு வீட்டார் வாக்குவாதம் செய்த நிலையில், சிறுமியை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியின் கரண் விஹார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முனீஷ் என்பவர் வசித்து வருகிறார். அந்த நபருக்கும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முனீசுக்கும், அவரது அண்டை வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
Scroll to load tweet…

அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுமி வீட்டின் மாடியில் நின்று கொண்டு முனீசிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த முனீஷ் சிறுமியின் கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார். பின்னர் சிறுமியை வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

அது என்னோட தப்பு தான்; சாவர்க்கர் தொடர்பான கருத்துக்கு வருத்தம் தெரிவித்த சுதா கொங்குரா

இதனால் மாடியில் இருந்து, சாலையில் வந்து விழுந்த சிறுமிக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக உள்ள முனீசை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.