இன்று எனக்கு விடுமுறை வேண்டும் என கேட்டுக் கொள்ளவே இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன். தயவு செய்து எனது விடுமுறையை ஏற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.
ஊழியர் ஒருவர் விடுப்புக்கு கேட்டு எழுதிய மின்னஞ்சல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. விடுப்பு கோரி அந்த நபர் எழுதிய விண்ணப்பத்தில், விடுப்பான காரணத்தை அதிக வெளிப்படையாக தெரிவித்தமைக்காக அந்த நபரின் நேர்மை இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
விடுப்புக் கேட்டு அந்த நபர் அனுப்பிய மின்னஞ்சலின் ஸ்கிரீன்ஷாட் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சாஹில் என்ற நபர் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் ஸ்கிரீன்ஷாட் உடன், எனது ஜூனியர்கள் இனிமையானவர்கள், நேர்முக தேர்வுக்கு செல்ல என்னிடம் விடுப்பு கேட்கின்றனர் என கூறி இருக்கிறார்.
ஸ்கிரீன்ஷாட்டின் படி, “வணக்கம் சார், வாழ்த்துக்கள், காலை வணக்கம். வேறு ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கான நேர்முக தேர்வில் இன்று நான் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால், இன்று எனக்கு விடுமுறை வேண்டும் என கேட்டுக் கொள்ளவே இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன். தயவு செய்து எனது விடுமுறையை ஏற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்,” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

நேர்மைக்கு பாராட்டு:
இந்த ட்விட்டர் பதிவுக்கு பலர் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். பலர் இந்த நபரின் நேர்மையை பாராட்டி ட்விட்டர் தகவல் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர், ஊழியர் இவ்வளவு நேர்மையாக இருக்க காரணம் நிர்வாகத்தின் திறமை மிக்க அனுகுமுறையாகத் தான் இருக்க வேண்டும் என்ற வாக்கில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதே பதிவுக்கு பதில் அளித்த மற்றொரு பயனர், ராஜினாமா கடிதம் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை இணைத்து இருந்தார். அதில் ராஜினாமா கடிதம் என குறிப்பிட்டு, அதன் பின் பை பை சார் என்று மட்டும் எழுதி கையெழுத்திடப்பட்டு இருந்தது. இது மட்டும் இன்றி பலர் இதே போன்ற ராஜினாமா கடிதங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.
