தங்கையை தன்னோடு பிறந்த அண்ணனே  கற்பழித்ததால் கர்ப்பமடைந்த  பெண் பிரசவித்துள்ளார். சகோதரியை  கர்ப்பமாக்கிய    சிறுமியின் சகோதரனை  போலீசார் கைது செய்து வழக்கு பதிவிட்டுள்ளனர்.

சண்டீகரில் ஒரு வீட்டின் முன்பு ஒரு பச்சிளம் குழந்தையை  விட்டுச் சென்றுள்ளனர். அப்பகுதியில் நடந்து சென்றவர்கள் குழந்தை தெருவில்  கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த வீட்டின் உரிமையாளருக்கு தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற  போலீஸார் அந்த பெண் குழந்தையை மீட்டு அங்குள்ள அரசு  சிறப்பு மருத்துவமனைக்கு சேர்த்தனர்

இது  குறித்து போலீஸார் கூறுகையில், அடையாளம் தெரியாத நபர் குழந்தையை ஆதரவற்று தெருவில் போட்டு விட்டுச் சென்றுள்ளார் என கருதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதைத்தொடந்து, விசாரணையில் அந்த குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணின் வீட்டை அறிந்து மொஹாலி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவருடைய 17 வயது அண்ணன் ஒரு ஆண்டுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்தது அந்த சிறுமியின் தாய்க்கும் தெரிந்துள்ளது. இந்நிலையில்தான் சிறுமிக்கு பிரசவம் நடந்து பெண் குழந்தை  பெற்றெடுத்துள்ளார். இதற்குப்பின் குழந்தையை விடுதியில்  விட்டுவிட்டு வருவதற்கு சென்றுள்ளனர். குழந்தைகள் காப்பகம் இருக்கும் இடம் தெரியாததால் ஒரு வீட்டின் முன்பு அந்தக் குழந்தையை  வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து சைல்ட்லைன் இயக்குநர், அவருடைய பணியாளர் ஒருவரை அந்த பெண்ணின் வீட்டுக்கு அனுப்பிவைத்து விசாரித்துள்ளார்.

அங்கே அந்த பெண் தெருவில் வீட்டின் முன்பு போட்டுவிட்டு வந்த குழந்தைக்கு அப்பா தனது சகோதரன்தான் என்றும் தனது சகோதரன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததையும் கூறியுள்ளார். மேலும், அந்த பெண் குழந்தையை காப்பகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த சிறுமியின் சகோதரன் மீது போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். சகோதரன் தனது தங்கையை  கற்பழித்து   கர்பமாக்கி பிரசவமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.