இரண்டு மாடி கட்டிடத்தின் முதல் மாடியின் பால்கனியில் ஒருவர் தொங்குகிறார். வீட்டில் இருப்போர் சிலர், அவரை தூக்க முயற்சிக்கின்றனர். ஆனால் முடியவில்லை. 

உத்திரபிரதேச மாநிலம், காஜியாபாத்தில் ஒரு அதிர்ச்சியான வைரல் சம்பவம் நடைபெற்றுள்ளது. நபர் ஒருவர் வீட்டின் பால்கனியில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினரால் மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இரண்டு மாடி கட்டிடத்தின் முதல் மாடியின் பால்கனியில் ஒருவர் தொங்குகிறார். வீட்டில் இருப்போர் சிலர், அவரை தூக்க முயற்சிக்கின்றனர். ஆனால் முடியவில்லை. இன்னும் அக்கம் பக்கத்தினர் சிலர் அவரது கையைப் பிடித்து மேலே இழுக்க முயல்கின்றனர். பின்னர் அவர் மாடியில் இருந்து மீட்கபட்டார். இச்சம்பவம் லோனியின் இக்ராம் நகரில் நடந்துள்ளது. 

அவர் பால்கனியில் தூக்கில் தொங்குவதை பார்த்த அவரது மனைவி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் வருவதற்குள் அவரது குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் முதல் தளத்தில் கூடி அந்த நபரை மேலே இழுத்தனர். இதேபோல, பிப்ரவரியில், ஃபரிதாபாத்தில் ஒரு பெண் தனது மகனை ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு உயரமான மாடியின் 10 வது மாடியில் சேலையால் தொங்கவிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.