தன் மனைவியை காதலித்தவருக்கே திருமணம் செய்து வைத்த கணவனை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் சுந்தர்கார்க் மாவட்டத்தைச் சேர்ந்த பாமரா பகுதியைச் சேர்ந்தவர் பாசுதேவ் டாப்போ (28). இவருக்கும் ஜார்ஜகுடா தேப்திஹி (24) என்பவருக்கும் கடந்த மார்ச் 4 ஆம் தேதி திருமணம் நடந்தது. ஜார்சுகுடா தேப்திஹிக்கு பெற்றோர்கள் இல்லை.

திருமணம் நடந்த 6 நாட்கள் கழித்து, சனிக்கிழமை அன்று, இந்த புதுமணத்தம்பதிகளை பார்ப்பதற்காக ஜார்சுகுடாவின் உறவினர்கள் 3 பேர் அவர்களின் கிராமத்துக்கு சென்றனர். மூன்று பேரையும் பாசுதேவ் டாப்போ வரவேற்றார். டாப்போவும், வீட்டுக்கு வந்த இரண்டு உறவினர்களும் டாப்போவின் கிராமத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக வெளியே சென்றனர்.

டாப்போ வீட்டுக்கு வந்த உறவினர்களில் ஒருவர், புது மணப்பெண்ணான ஜார்சுகுடாவுடன் நெருக்கமாக இருப்பதை அந்த கிராமத்து மக்கள் பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர். 

அவர்களிடம் விசாரித்த கிராமத்து மக்கள், தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், பெற்றோர் இல்லாத என்னை, உறவினர்கள் கட்டாயப்படுத்தி ஜார்சுகுடாவுடன் திருமணம் நடத்தியதாகவும் கூறினார். இதனைக் கேட்ட ஜார்சுகுடா டாப்போ, காதலித்த அவர்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைப்பதுதாட்ன சரியானது என்ற முடிவுக்கு வந்தார்.

இதையடுத்து, அவர்களின் இரண்டு வீட்டாரிடமும் பேசி, ஒப்புதல் பெற்று முறைப்படி அவரது மனைவிக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு நான் திருமணம் செய்யவில்லை என்றால், எங்கள் 3 பேரின் வாழ்க்கையும் நாசமாகியிருக்கும். இதுதான் சரியான முடிவு. இப்போது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று டாப்போ கூறினார். டாப்போவின் இந்த முடிவுக்கு கிராம மக்கள் பாராட்டும் தெரிவித்தனர்.