வீட்டு வாசலில் நிறுத்தும்போது வெடித்துச் சிதறிய கார்... காருக்குள் இருந்த இளைஞர் பரிதாப பலி
உயிரிழந்தவர் 35 வயதான கண்ணன் என்ற கிருஷ்ண பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்டர்நெட் கஃபே நடத்தி வந்த இவர் திருமணம் ஆகாதவர்.
ஆலப்புழா மாவேலிக்கரையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கார் வெடித்து சிதறியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் 35 வயதான கண்ணன் என்ற கிருஷ்ண பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாவேலிக்கரையில் காரஜ்மா பகுதியைச் சேர்ந்த அவர் தனது வீட்டு வளாகத்திற்கு அருகில் காரை நிறுத்தியபோது இந்த விபத்து நடந்துள்ளது.
உயிரிழந்த கிருஷ்ண பிரகாஷ் மாவேலிக்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இன்டர்நெட் கஃபே நடத்தி வந்தார். பணி முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அவர் தனது வாடகை வீட்டின் முன் நிறுத்தியபோது வாகனம் திடீரென வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
நிலவைப் படம்பிடித்த சந்திரயான்-3! முதல் காட்சிகளை வெளியிட்டது இஸ்ரோ!
கார் வெடித்தபோது எழுந்த பயங்கர சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்தும் தீயை அணைக்க முயன்றனார். ஆனால், அவர்களால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. தீயணைப்பு படையினர் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் கிருஷ்ண பிரகாஷைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கிருஷ்ண பிரகாஷ் திருமணமாகாதவர். மறைந்த தங்கப்பன் பிள்ளை மற்றும் ரதியம்மா ஆகியோரின் மகன்.