மகளின் திருமண வரவேற்பில் பாடல் பாடிக் கொண்டே இருக்கும்போது துணை காவல் ஆய்வாளர் விஷ்ணு பிரசாந்த் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத். இவருடைய மகளுக்கு இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பாட்டு கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், மகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு பாடல் பாடினார்.

இவர் பாடிக்கொண்டே இருக்கும் போது, திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக இவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போதிலும், இவருடைய உயிர் பிரிந்தது.

இந்த சம்பவம், திருமணத்திற்கு வந்த அனைவரையில் அதிர்ச்சியில் உறையவைத்தது. மணப்பெண் உற்பட குடும்பத்தினர் இந்த சம்பவத்தால் கதறி அழுதது நெஞ்சை உருக்கும் விதத்தில் இருந்தது.

"