நேபாளத்தில் மணமகன் ஒருவர் தனது திருமணத்திற்கு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பயணம் செய்ய முழு விமானத்தையும் பதிவு செய்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

நேபாளத்தில் மணமகன் ஒருவர் தனது திருமணத்திற்கு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பயணம் செய்ய முழு விமானத்தையும் பதிவு செய்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் தங்கள் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்துவதற்காக ஒவ்வொருவரும் புதிய வகையில் திருமண ஏற்பாடு செய்வது, மேடை அலங்காரம் செய்வது முதல் பிரமாண்ட நுழைவுகள் வரை திருமணத்திற்கு வருவோரை கவரும் வகையிலும் தனித்துவமாகவும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் மணமகன் ஒருவர் தனது திருமணத்திற்கு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பயணம் செய்ய முழு விமானத்தையும் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்… டிவிட்டரில் நெகிழ்ச்சி பதிவு!!

View post on Instagram

இதுக்குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மணமகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விமானத்திற்குள் கைகளை அசைத்து, சத்தமாக ஆரவாரம் செய்து, தங்கள் கைகளால் இதய வடிவங்களை காண்பிக்கின்றனர். புவன் என்ற உற்சாகமான மணமகனும் அதில் தனது கைகளில் மெஹந்தியுடன் மற்றும் கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார். இந்த திருமணம் நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்றது. இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, 17 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 2024க்குள் ரூ.25,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஏற்றுமதியை எட்ட இலக்கு... ராஜ்நாத் சிங் தகவல்!!

View post on Instagram

மேலும் இதனை 38,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்தததோடு கருத்துக்களும் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர் நகைச்சுவையாக ''வாழ்க்கையில் இவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும்.'' என்று எழுதியிருந்தார். மற்றொருவர், ''நீங்கள் பணக்காரர் என்று சொல்லாமல் சொல்லுங்கள்.''என்றார். மூன்றாவதாக ஒருவர், ''நான் உண்மையிலேயே ஆர்வமாக உள்ளேன். இப்படி செய்ய எவ்வளவு செலவாகும்? என்று கேட்டுள்ளார். இவ்வாறு பல்வேறு கமெண்ட்டுகள் அந்த வீடியோக்கு வந்த வண்ணம் உள்ளன. 

View post on Instagram