செளகிதார் மோடியை தாறுமாறாக வறுத்தெடுக்கும் அரசியல் தலைவர்களில், மேற்கு வங்க முதல்வரான நம்ம தீதி....மம்தா பானர்ஜிக்கு நிகர் அவரேதான். அடிச்சு நொறுக்கணுமுன்னு முடிவு பண்ணிட்டா, யோசனையே இல்லாமல் இறங்கி பொளந்து கட்டிடுவார் விமர்சனங்களை. 

அந்த ரூட்டில், சமீபத்தில் மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் பசிராத் மக்களவை தொகுதியில், இளம் வேட்பாளரான நுஷ்ரத் ஜஹானுக்கு ஆதரவாக மைக் பிடித்தவர் காவி டீமை கதறக் கதற வெளுத்துவிட்டார் இப்படி.... “எழுதி வெச்சுக்குங்க, நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் பி.ஜே.பி. அதிக இடங்களில் வெற்றி பெறாது. அதிக தொகுதிகளைக் கொண்டிருக்கும் உத்தரபிரதேசத்தில் கடந்த தேர்தலில் எழுபத்து மூன்று இடங்களில் பி.ஜே.பி. வென்றது. ஆனால் இந்த முறை பதிமூன்று அல்லது பதினேழை நெருங்குவதே கஷ்டம். அதனினும் குறையவே வாய்ப்பு. 

இது போக தென்னிந்தியாவில்...தமிழகம், ஆந்திரா, கேரளம் என ஆரம்பித்து வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஒடிசா என எங்கேயுமே ஒரு இடத்தில் கூட ஜெயிக்க மாட்டீங்க கன்னா நீங்க. மத்திய பிரதேசத்திலும் படு தோல்வி பெறும் இந்த சர்வாதிகார கட்சி. மேற்கு வங்க மக்களே, பி.ஜே.பி.க்கு ஓட்டு போட்டுடவே செய்யாதீங்க. இந்த மாநிலத்தை நம் திரிணமுல் காங்கிரஸ் ஆள்வது போல், இந்த நாட்டை ஆள இருக்கும் புதிய பிரதமரை உருவாக்குவதில் நம் கட்சி முக்கிய பங்கு வகிக்கணும். அதற்கு ஏற்ப வாக்குகளை அள்ளிக் கொட்டுங்கள்.” என்றவர், கையோடு....“பி.ஜே.பி., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஒன்றே. ஆனால் பி.ஜே.பி.யை எதிர்க்கும் துணிவு நமக்கு மட்டுமே உண்டு.” என்று கடைசியில் வெச்சார் பாருங்க ஒரு செக். நீ தெறிக்க விடு  தீதி!