கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரை காப்பாற்றுவதற்காக மத்திய அரசுடன் அம்மாநில முதல்வர் மம்தா மோதுவது, பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ளது.

நாட்டில் நடந்த பெரிய ஊழல்களில் ஒன்று சாரதா சிட்பண்ட் மோசடி. இந்த ஊழல் வழக்கை கேள்விப்படாதவர்களே இருக்கமாட்டார்கள். மேற்கு வங்கம் ஒடிசா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து ஏழை எளிய மக்கள் தங்கள் உழைத்து சேர்ந்த பணத்தினை இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக அளித்த உறுதிமொழியை நம்பி பணம் போட்டனர். 

சாராத சிட்பண்ட் நிறுவனத்தின் தலைவரான சுசில் சென் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர். இந்நிலையில் சாராத சிட் பண்ட் நிறுவனத்தில் பணம் போட்டவர்களுக்கு காத்திருந்தது பேர் இடி தவணை தொகை முடிவடைந்த நிலையில் மக்களுக்கு சேர வேண்டிய பணத்தினை நிறுவனம் திருப்பி கொடுக்காமல் நிறுவனம் காலதாமதம் செய்தது. 

இதனால் பணம் போட்டவர்கள் பணத்தினை வாங்க வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபட மேற்கு வங்கம், ஒடிஷா மாநிலங்களில் வன்முறை வெடித்தது வன்முறையை கட்டு படுத்த போலீஸ் எடுத்த நடவடிக்கையில் 17 பேர் உயிரிழந்தனர் 1000 மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து அமலாக்க துறை சாரதா நிதி நிறுவன மோசடியில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிந்தது. மேலும் 10000 கோடிக்கு மேல் நிறுவனம் மக்களை ஏமாற்றி இருப்பதாகவும் தெரிவித்தது. இதன் விசாரணை விரிவடைய ப. சிதம்பரம், மம்தா பானர்ஜி ஒடிசாவை சேர்ந்த பிஜு தன்வான் ஆகிய முக்கிய தலைவர்களின் பெயரும் அடிபட்டது.

இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.-ஐ கைது செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இதனால் மம்தா மத்திய அரசு மீது கடுமையான குற்றங்களை முன்வைத்தார். ப.சிதம்பரத்தின் மனைவி நளினியும் இதே வழக்கில் ஜாமினில் வெளியில் இருக்கிறார்.

 

திடீர் திருப்பமாக மேற்குவங்க மாநில கமிஷனர் வீட்டை சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்ற போது மம்தா அதனை தடுத்து அவர்களை சிறை பிடிக்க தயாராகிவிட்டார். தன்னிச்சையான சிபிஐ அமைப்பை தடுக்க மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை. அப்படி இருக்கையில் மம்தா ஏன் இப்படி செய்தார்? தற்போது கமிஷனர் வீட்டிலேயே உட்காந்து மத்திய அரசிற்கு எதிராக தர்ணா போராட்டத்தை தொடங்கி இருக்கிறார். அமைச்சர் வீட்டு கல்யாணத்திற்கு கூட செல்லாத மம்தா ஏன் கமிஷனர் வீட்டு வாசலில் உட்காத்திருக்கிறார்? 

 சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த மம்தா பானர்ஜி சாராத சிட் பண்ட் ஊழலுக்கு பிறகு மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக வந்தது எப்படி என்ற கேள்விகள் இப்போது மம்தா பானர்ஜியை நோக்கி நாடுமுழுவதும் வைக்க படுகிறது. இதில் மிக பெரிய சோகம் சாரதா நிறுவனத்தில் முதலீடு செய்த 96 % பேர் தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்காகவும், படிப்பிற்காகவும் பணம் சேர்த்தவர்கள் அவர்களால் எதிர்த்து வழக்கு தொடுப்பதற்கு கூட பணமில்லை. இதில் 4000 தமிழ் குடும்பங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.