காங்கிரஸ் தலைவராக வெற்றி பெற்றுள்ள மல்லிகார்ஜு கார்கேவுக்குவுக்கு வாழ்த்துகள். காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவுதான் இறுதியானது, இதை பணிவுடன் ஏற்கிறேன். காங்கிரஸ் உறுப்பினராக இருந்து, தலைவரைத் தேர்ந்தெடுத்ததில் பெருமையாக கருதுகிறேன் என திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் தெரிவித்தார்

காங்கிரஸ் தலைவராக வெற்றி பெற்றுள்ள மல்லிகார்ஜு கார்கேவுக்குவுக்கு வாழ்த்துகள். காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவுதான் இறுதியானது, இதை பணிவுடன் ஏற்கிறேன். காங்கிரஸ் உறுப்பினராக இருந்து, தலைவரைத் தேர்ந்தெடுத்ததில் பெருமையாக கருதுகிறேன் என திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் தெரிவித்தார்

காங்கிரஸ் கட்சிக்கு புதியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் 17ம்தேதி நடந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவும், கேரளாவைச் சேர்ந்த சசி தரூரும் போட்டியிட்டனர். சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் கடந்த 24 ஆண்டுகளில் தலைவர் பதவிக்கு போட்டியாதது இதுதான் முதல் முறையாகும்.

அனைத்து மாநிலங்களிலும் 68 பூத்களிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களித்தனர், ஏறக்குறை. 9500 வாக்குகள் பதிவாகின. அனைத்து வாக்குப்பெட்டிகளும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மல்லிகார்ஜுன கார்கே7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார், சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்றார். 

Scroll to load tweet…

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார்? தேர்தல் முடிவு இன்று அறிவிப்பு!!

இந்த தோல்விக்குப்பின் சசி தரூர் வெளியிட்ட அறிக்கையில் “ காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவுதான் இறுதியானது. இந்த முடிவை பணிவுடன் ஏற்கிறேன். காங்கிரஸ்கட்சியில் தொண்டராக, உறுப்பினராகஇருந்து தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பெற்றதை பெருமையாகக் கருதுகிறேன். 

எங்களின் புதிய தலைவர், அனுபவம்மிக்கவர், மூத்த தலைவர். அவரின் வழிகாட்டுதலில், ஒட்டுமொத்தமாக சேர்ந்து உழைத்து, கட்சியை அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்துவோம். 

காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே : யார் இவர்? பின்னணி என்ன?

காங்கிரஸ் கட்சியில் கால் நூற்றாண்டுகளாக தலைமைப் பொறுப்பு வகித்து, எங்களின் மிக முக்கியமான தருணங்களில் நங்கூரமாக இருந்ததற்காகவும், பதவி விலகும் தலைவர் சோனியா காந்திக்கு கட்சியும், தொண்டர்களும் கடன் பட்டுள்ளோம்.

Scroll to load tweet…

எதிர்காலத்திற்கான புதிய பாதைகளை எங்களுக்கு இந்தத் தேர்தல் வழங்கியுள்ளது. இந்த செயல்முறையை அங்கீகரித்த சோனியா காந்தியின் முடிவு சந்தேகத்திற்கு இடமின்றி அவரின் சாதுரியத்திற்கும், கட்சியின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வைக்கும் பொருத்தமான சான்று. எதிர் வரும் சவால்களை முறியடிக்க கட்சியின் புதிய தலைவரை சோனியா தொடர்ந்து வழிநடத்துவார், ஊக்குவிப்பார் என்று நம்புகிறேன்

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது: சோனியா, பிரியங்கா வாக்களிப்பு

தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த துணையாக இருந்த ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி வத்ராகுவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நேருகாந்தி குடும்பம் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் இதயங்களில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது, அதை எப்போதும் வைத்திருக்கும்
இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்