Asianet News TamilAsianet News Tamil

டெல்லியில் பயங்கரம்.. பள்ளிப் பேருந்தில் வைத்து 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - மாணவர் அதிரடி கைது!

டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள ரோகினி என்ற பகுதியில் பள்ளிப் பேருந்தில் வைத்து, மூத்த மாணவர் ஒருவர், ஆறு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இளைத்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Male Student Arrested after molesting 6 year old girl child inside school bus ans
Author
First Published Sep 2, 2023, 9:00 PM IST

முன்னதாக, தனியார் பள்ளி பேருந்தில், மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் கோரி, டெல்லி மகளிர் ஆணையம் (DCW) ரோகினி நகர துணை போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு கடந்த புதன்கிழமை தகவல் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. "பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, அளித்த எழுத்துப்பூர்வ புகாரில், தனது மகள் பள்ளி பேருந்தில் ஒரு பையனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் அவர் கூறினார்.

வெட்டப்பட்ட உதடுகள்.. பிறப்புறுப்பில் கொடூர காயங்கள்.. 85 வயது மூதாட்டியை கற்பழித்த கொடூரன் - முழு விவரம்!

“ஐபிசியின் பிரிவுகள் 354, மற்றும் 228A மற்றும் POCSO சட்டத்தின் 10/21 ஆகியவற்றின் கீழ் பேகம்பூர் காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறை அதிகாரிகள் கூறினார்.

"டெல்லியின் பேகம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தான் அந்த பாதிக்கப்பட்ட சிறுமி படிப்பதாக கமிஷனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23 அன்று, தனது மகளின் பள்ளி பேருந்து தனது மகளை, தனது வீட்டு வாயிலில் இறக்கிவிட்டபோது, அதிலிருந்து இறங்கிய தன் மகளின் புத்தக பை சீறுநீர் பட்டு ஈரமாகியுள்ளதை அவர் கண்டதாகவும். 

உடனே அது குறித்து விசாரித்தபோது, தன்னை விட வயதில் மூத்த மாணவன் ஒருவன் தன்னிடம் முறைகேடாக நடந்தது குறித்தும் அவர் கூறியுள்ளார். தற்போது அந்த மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. 

டெல்லியில் இன்று 85 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. உதடுகள் ப்ளேடுகளால் வெட்டப்பட்டு, பிறப்புறுப்பில் கடுமையான காயங்களோடு அந்த மூதாட்டி சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த வழக்கில் 28 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

பிஞ்சுக் குழந்தைகளை குளத்தில் மூழ்கடித்துக் கொன்று, சடலங்களுடன் அசந்து தூங்கிய தாய்!

Follow Us:
Download App:
  • android
  • ios