இந்தியாவில் கொரோனா முதல் அலை இரண்டாது அலை பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கையால் பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக நாட்டில் தினசரி பாதிப்பு 1000 கீழே சென்றது. இந்நிலையில், இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு திடீரென உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா முதல் அலை இரண்டாது அலை பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கையால் பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக நாட்டில் தினசரி பாதிப்பு 1000 கீழே சென்றது. இந்நிலையில், இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு திடீரென உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எச்சரிக்கை
குறிப்பாக டெல்லியில் கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்று பரவல் 500 சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கையை மக்கள் கைவிடக் கூடாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மத்திய அரசு அறிவுறுத்தல்
இந்நிலையில் உத்தரபிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, மிசோரம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும், முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இம்மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமக்கப்பட வேண்டும். தனி மனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்