ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில், 19 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் முக்கிய புள்ளியும் கொல்லப்பட்டார்.

ஆந்திர பிரதேசம் - ஒடிசா எல்லையில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அதிகளவில் உள்ளனர். இதனால், அங்கு அசம்பாவித சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதையடுத்து அவர்களை பிடிக்க, இருமாநில போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்ற இரவு இருமாநில போலீசாரும், மாவோயிஸ்ட்தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மால்கான்கிரியில் இருந்துசுமார் 10 கி.மீ. தொலைவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முகாம் இருந்ததை கண்டு பிடித்தனர். அங்கு 60க்கு மேற்பட்ட மவோயிஸ்ட் தீவிரவாதிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

உடனே போலீசார், முகாம் மீது அதிரடி தாக்குதல்

இந்நிலையில், நேற்று இரவு இருமாநில போலீசாரும் இணைந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மால்கான்கிரியில் இருந்துசுமார் 10 கி.மீ. தொலைவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முகாம் இருந்ததை கண்டு பிடித்தனர்.

அங்கு 60க்கு மேற்பட்ட மவோயிஸ்ட் தீவிரவாதிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.உடனே போலீசார், முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இநத தாக்குதலில், 19 மவோயிட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

அதில், இந்த தாக்குதலில் கஜரலா ரவி (எ) கணேஷ் (எ) ஆனந்த் (எ) உதய் (46) என்பவரும் பலியானார். இவர், மவோயிஸ்ட் தீவிரவாதிகளின் முக்கிய புள்ளி என தெரிவந்துள்ளது.