Moitra: Louis Vuitton:விலைவாசி உயர்வு! ரூ.2 லட்சம் மதிப்புள்ள லூயிஸ் விட்டான் பேக்கை மறைத்தாரா மஹூவா மொய்த்ரா?
நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, தன்னுடைய ரூ.2 லட்சம் மதிப்புள்ள லூயிஸ்விட்டான் ஹேண்ட் பேக்கை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா மறைத்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, தன்னுடைய ரூ.2 லட்சம் மதிப்புள்ள லூயிஸ்விட்டான் ஹேண்ட் பேக்கை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா மறைத்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ வெளியாகி இருப்பதால், நெட்டிசன்கள் சந்தேகங்களை எழுப்பி மொய்த்ராவை விம்பு இழுத்து வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கப்பிரிவு திடீர் ரெய்டு
விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் பெயரளுக்குத்தான் விவாதம், ஆனால், திரிணமூல் எம்.பி. வைத்திருப்பதோ ரூ.2 லட்சத்தில் ஹேண்ட்பேக் என்று நெட்டிஸன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்
மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. காகோலி கோஷ் தாஸ்திதார் விலைவாசி உயர்வு குறித்துப் பேசினார். அப்போது அருகே அமர்ந்திருந்த, அதே கட்சியைச் சேர்ந்த மஹூமா மொய்த்ரா விலைவாசி உயர்வு என்றதும் தன்னுடைய லூயிஸ் விட்டான் ஹேண்ட்பேக்கை எடுத்து மேஜைக்கு கீழே வைத்துவிட்டார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அஜித் தத்தா ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், “ விலைவாசி உயர்வு குறித்த பேச்சு எழுந்ததும், சிலர், லூயிஸ்விட்டான் ஹேண்ட் பேக்கை மேஜைக்கு கீழ் வைத்துவிட்டார்கள்” எனக் கிண்டலடித்துள்ளார்.
இதையடுத்து, ட்விட்டரின் டிரண்டிங் பட்டியலில் லூயிஸ்விட்டான் ஹேண்ட் பெயர் வந்து டிரண்டாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி காட்டுத்தீ போல் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. நெட்டிசன்கள், மஹூவாவை கிண்டலடிக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை தொடர்ந்து ஷேர் செய்து வருகிறார்கள்.
இறந்தவர்களுக்காக நடக்கும் ‘பிரேதத் திருமணம்’: கர்நாடகாவில் எப்படி நடக்கிறது? விரிவான விளக்கம்