Asianet News TamilAsianet News Tamil

Pretha Kalyanam: இறந்தவர்களுக்காக நடக்கும் ‘பிரேதத் திருமணம்’: கர்நாடகாவில் எப்படி நடக்கிறது? விரிவான விளக்கம்

கர்நாடக மாநலத்தின் தட்சிணகன்னடா மாவட்டத்தில் உயிரிழந்தர்களுக்கு திருமணம் நடக்கும் சடங்குகள் பாரம்பரியமாக நடந்து வருகின்றன. அதைப்பற்றி இந்தச் செய்தித்தொகுப்பு விளக்குகிறது.

In Karnataka,  How two deceased individuals were wed : a popular Twitter thread explains how.
Author
Dakshina Kannada, First Published Aug 2, 2022, 12:14 PM IST

கர்நாடக மாநலத்தின் தட்சிணகன்னடா மாவட்டத்தில் உயிரிழந்தர்களுக்கு திருமணம் நடக்கும் சடங்குகள் பாரம்பரியமாக நடந்து வருகின்றன. அதைப்பற்றி இந்தச் செய்தித்தொகுப்பு விளக்குகிறது.

கேரளாவின் மலபார், மங்களூரு ஒட்டியை கேரளப் பகுதிகளிலும் சில சமூகத்தினர் மத்தியிலும், தட்சிணகன்னடாவிலும் இன்று உயிரிழந்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது. திருமணம்செய்யாமல் உயிரிழந்த இளைஞர்கள், பெண்கள், சிறு குழந்தையிலேயே இறந்தவர்களுக்காக இந்த சடங்கு நடத்தப்படுகிறது.

கன்னட மக்களாலும், கேரள மக்களாலும் பிரேதக் கல்யாணம் என்று அழைக்கப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த ஆண், பெண் இருவருக்கும் சமீபத்தில் இரு குடும்பத்தார் சார்பில் திருமணம் நடத்தப்பட்டது. இந்த திருமணத்தை யூடியூப்பர் ஆணே அருண் ஆவணமாகப் பதிவு செய்துள்ளார்.

இந்த பிரேததத் திருமணம் குறித்து அருண் நீண்ட ட்விட்டர் பதிவு மூலம் தெளிவாக விளக்கியுள்ளார்.  அவர் ட்விட்டரில் கூறியதாவது:

நான் ஒரு திருமணத்தில் இன்று பங்கேற்கிறேன். இதெல்லாம் ட்விட்டில் சொல்லத் தகுதியானதா எனக் கேட்டகலாம். இந்த திருமணத்தில், உண்மையில் மணமகனும் மணமகளும் 30 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்கள்.

 

அவர்களின் திருமணம் இன்று நடக்கிறது. தட்சிண கன்னட மரபுகள் தெரியாதவர்களுக்கு  இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் இதுதான் இங்கு தீவிர பாரம்பரியம்.

திருமணம் நடக்காமல் ஒருவரின் வாழ்க்கை முழுமை பெறாது. தங்கள் குடும்பத்தில் திருமணம் செய்யாதவர்கள் யாரேனும உயிரிழந்துவிட்டார். அவர்களின் ஆன்மா அலைந்து கொண்டே இருக்கும், மோட்சத்துக்கு செல்லமாட்டார்கள். அவர்களின் ஆன்மா அமைதியற்று இருப்பதால் தங்கள் குடும்பத்தினர் அமைதியாக வாழ முடியாது என்று நம்புகிறார்கள்.  ஆதலால் இறந்தவர்களுக்காக திருமணம் நடத்தப்படுகிறது.

நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை இயல்பாகஎவ்வாறு நடக்குமோ அதுபோல் மகிழ்ச்சியாக நடப்பதால், பங்கேற்பவர்களும் சிரித்த முகத்துடனே மகிழ்ச்சியாகப் பங்கேற்கிற்றார்கள். மணமகன் சார்பில் மணமகளுக்கு முகூர்த்தப் புடவை வழங்கப்படுகிறது. 

In Karnataka,  How two deceased individuals were wed : a popular Twitter thread explains how.

அதை கொண்டுசெல்லும் மணமகள் வீட்டார், புடையை மணமகளுக்கு அணிவிக்க போதுமான நேரம் எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த சடங்கின் போது தங்களின் அன்புக்குரியவர்களின் ஆத்மா தங்களுடன் இருப்பது போன்ற நிறைவுடன் திருமணம் நடக்கிறது.

 

திருமண முகூர்த்தத்துக்கு 5 நிமிடங்களுக்கு முன்புவரை, மணமகள், மணமகன் பெயரை யாரும் கூறுவது இல்லை கேட்பதும் இல்லை. ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்தபின்பும்கூட மணமகன், மணமகள் பெயரைக் கேட்க யாரும் நினைக்கவில்லை.திருமணத்துக்கு 5 நிமிடங்களுக்கு சந்தப்பாவுக்கும், ஷோபாவுக்கும் திருமணம் என்று கூறினர்.

இந்த திருமணத்தில் பங்கேற்க திருமணமாகாதவர்கள், குழந்தைகளுக்கு அனுமதியில்லை. இறந்தவர்களின் அணிந்திருந்த சட்டை, வேட்டை புடவை தனித்தனி நாற்காலியில் கட்டப்படுகிறது. அந்த நாற்காலியில் அவர்கள் அமர்ந்திருப்பதாக நம்பப்படுகிறது. இரு நாற்காலிக்கும் மாலை அணிவிக்கப்பட்டு, முகூர்த்த நேரம் வந்ததும், மணமகன் சட்டை மணமகள் புடவையில் கட்டி, தாலி கட்டப்படுகிறது.

திருமணம் முடிந்ததும் மணமகளும், மணமகனும் இடம் மாற்றி அமரவைக்கப்படுகிறார்கள். அதன்பின் வழக்கமான திருமணத்தில் பெயரியவர்கள் ஆசி வழங்குவதைப் போல், இருநாற்காலிகளுக்கும் அட்சதை தூவி ஆசி வழங்கப்படுகிறது.

ஆசி வழங்கும் நிகழ்ச்சி முடிந்தபின்,மணமகன், மணமகள் இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்று கடவுளிடம் ஆசி பெறப்படுகிறது. இருவரும் வீட்டுக்குள் மீண்டும் நுழையும் போது ஆரத்திஎடுத்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின் திருமணத்தில் வழங்கப்படுவதுபோல் சிறப்பான விருந்து வழங்கப்பட்டு திருமண நிகழ்ச்சி நடந்து முடியும்.

 

குடும்ப உறுப்பினர்களில் உயிரிழந்தவர்கள் நம்முடன் நடமாடுகிறார்கள் என்று நம்புகிறார்கள். உயிருடன் இருக்கும் பிள்ளைகளின் நலனுக்காக உழைக்கும் பெற்றோர் இறந்த தனது குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடையவும் இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். இதன் மூலம் இறந்தவர்கள் ஆத்மா மோட்சம் பெறும், ஆத்மா சாந்தி அடையும் என்று பெற்றோர் நம்புகிறார்கள். அவர்களின் மனதும் அமைதி அடைகிறது.

ஆனால் இதுபோன்ற திருமணங்களை நடத்துவது எளிதானது அல்ல. இந்த திருமணத்தில்கூட கடைசி நேரத்தில் சிக்கல், பிரச்சினைகள் வரக்கூடும். சமீபத்தில் கடைசி நேரத்தில் மணமகன் வீட்டார் மணமகளை புறக்கணத்தனர். இதுபற்றி விசாரித்ததில் மணமகனைவிட, மணமகளுக்கு வயது அதிகமாக இருந்ததாம்” 
இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios